Thursday, June 3, 2010


கலைஞ்சருக்கு வாழ்த்துக்கள்


இன்று பிறந்த நாள்

உம்மை வாழ்த்தத்தான்

என் தமிழ் காத்திருந்தது

தமிழிலே ஓர் அணி உண்டாமே

வஞ்ச புகழ்ச்சி அணி என்பாராமத்தை

எதொ நினைவுக்கு வந்தது

தலைவா

நள்ளிரவிலும் சிறை செல்ல

தயங்காத தானை தலைவா

இந்தி எதிர்ப்பு காட்டினாய்

தமிழில் பெயர் மாற்றினாய்

சொந்த எதிர்ப்பை கட்டினாய்

அரசு பெயர் நாட்டினாய்

ஜெ ஜெ டிசி, திரைப்பட நகர்

அரசு சொத்து தனி சொத்து அல்லவே

வாழ்க நின் வீரம்


தமிழனனுக்கு ஓர் இன்னல் என்றால்

தன்னையே தந்து நிற்பாய்

முப்பது ஆண்டு போர் எனினும்

மூன்று மணி நேர உணவு இடைவெளி

போதும் உமக்கு சட்டென்று நிறுத்திடுவாய் மனுநீதியே

நெஞ்சுக்கு நீதி கண்ட தற்கால மனுநீதியே

வாழ்க நின் திறன்


ஒரு புறம் தமிழக மக்கள்
மறுபுறம் உலக தமிழ் மக்கள்
இருவருமே உம்மக்கள்

இரவு பகல் பாராமல்

எந்நேரமும் மக்கள் மக்கள்

என்று அவர் நலனுக்ககாய்

அயராது உழைத்திடுவாய்

தள்ளாத வயதிலும் தில்லிவரை

சென்ற்றிடுவாய்

அடங்காத பரியை அடக்கி

தந்தையை மீட்டு வந்த

நவீன தேசின்கே

உன்னால்தான் தமிழகம்

இன்று பல அமைச்சர் நாற்காலிகள்

பெற்று நலம் காண்கிறது

வாழ்க நின் தொண்டு


பல நூறாயிரம் உயிரை இழந்து

இன்று தமிழ் மக்கள் நெஞ்சில்

வலி சுமந்து வாழ்கின்றார்

அவர் உரம் பெற உணர்வு பெற

செம்மொழி கண்டு மாநாடு நடத்தும்

செம்மொழி வேந்தே தமிழ் காவலரே

வாழ்க நின் தமிழ்


தமிழக வீடனைத்திலும் உலகம்

இன்று ஒரு பெட்டிக்குள் அடங்கி கிடக்கிறது

தமிழன் வேர்வை சிந்துவதை

காண முடியாது இலவச இன்சுவை தந்த

நீயல்லவா ஒன்பதாம் வள்ளல்

வாழ்க கொடை


பரிசு தர தோன்றும் ஒரு ரூபாய் அரிசி திட்டம்

காப்பீட்டு திட்டம் குடிசை மாற்று திட்டம்

இம்மாதிரியான திட்டம் இருப்பதால்

உம்மை மட்டம் தட்டுவோரும் போற்றுவார்

வாழ்க வாழ்க நீடூழி தமிழ் தொன்றாற்றி


- தீகுஞ்சு

No comments:

Post a Comment